வேதியியல் அறிஞர் சி என் ஆர் ராவ்(சிந்தாமணி நாகேஸ்வர ராமச்சந்திர ராவ்) பெங்களூருவில் பள்ளிப்படிப்பு, மைசூரில் பட்டப்படிப்பு, பனாரஸ் ஹிந்து பல்கலையில் வேதியல் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர்.1959ல் இந்தியா திரும்பியதும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸில் விரிவுரையாக பணியாற்றினார். பிரதமரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக பணியாற்றினார். 2014 இல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரில் 1964இல் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி, மின் பொறியியலில் பட்டம் பெற்றவர். 1980 இல் பச்சன் பச்சாவ் அந்தோலன் (குழந்தை பாதுகாப்பு இயக்கம்) என்ற அமைப்பை தொடங்கி, குழந்தை நலனுக்காக பணியாற்ற தொடங்கினார். குழந்தைகள் மற்றும் சிறார் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகவும் கல்வி உரிமைக்காக போராடியதற்கும் 2014இல் கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது